close
Choose your channels

ஜெயம் ரவியின் 'போகன்' 4 நாள் தமிழக வசூல் நிலவரம்

Tuesday, February 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா நடிப்பில் லட்சுமணன் இயக்கிய 'போகன்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. இந்த படத்திற்கு ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள், சமூக வலைத்தளங்களில் கிடைத்த பாராட்டுக்கள் காரணமாக வார இறுதி நாட்களில் நல்ல ஓப்பனிங் வசூல் கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்நிலையில் இந்த படத்தின் 4 நாட்கள் தமிழக வசூல் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்த படம் தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களில் ரூ12 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.1.61 கோடியும், கோவையில் சுமார் ரூ.2 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.3.1 கோடியும் நெல்லை-குமரி பகுதியில் சுமார் 60 லட்சமும் வசூல் செய்துள்ளது.

'தனி ஒருவன்' வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஜெயம்ரவி-அரவிந்தசாமி கூட்டணி இரண்டாவது முறையாக வெற்றியை ருசித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.