close
Choose your channels

ரஜினியின் '2.0'வில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்

Saturday, April 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளார்.
ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன Pearl Harbour, Die Hard மற்றும் Transformer உள்பட பல படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த 'KennyBates' தற்போது '2.0' படத்திற்கும் ஸ்டண்ட் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சிகளை இவர்தான் அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார், உள்பட பலர் நடித்து வரும் '2.0' படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்தின் டெல்லி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவலை விரைவில் படக்குழுவினர் அறிவிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.