close
Choose your channels

அஜித் வழிவிட்டதால் ஆகஸ்ட் 11-ல் குவியும் படங்கள்

Tuesday, August 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்றுதான் கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டது. எனவே இந்த தேதியில் 'தரமணி' தவிர மற்ற எந்த படமும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்த நிலையில் நேற்றிரவு இயக்குனர் சிவா, 'விவேகம்' திரைப்படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தில் வெளியாகும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான உடனே பல திரைப்படங்கள் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் தேதி என அறிவித்தது.

இப்போதைக்கு ஜோதிகாவின் 'மகளிர் மட்டும், உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'சி.வி.குமாரின் 'மாயவன்', விதார்த் நடித்த 'குரங்கு பொம்மை', புதுமுகங்கள் நடித்துள்ள படமான `தப்புத்தண்டா` ஆகிய படங்கள் ஆகஸ்ட் 11ல் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

மேலும் தனுஷின் 'விஐபி 2', சிபிராஜின் 'சத்யா', விக்ரம் பிரபுவின் 'நெருப்புடா' ஆகிய படங்களும் இதே ஆகஸ்ட் 11-ல் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.