close
Choose your channels

அஜித் பிறந்த நாளில் கனெக்க்ஷன் ஆகும் மகேஷ்பாபு படம்

Tuesday, April 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகேஷ்பாபு நடித்த ஸ்ரீமுந்துடு-செல்வந்தன் படத்தை அடுத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வந்த 'பிரம்மோத்சவம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'பிரமோத்சவம்' படத்தின் பாடல்கள் தல அஜித் பிறந்த நாளான மே 1ஆம்தேதி வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ஆதித்யா மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகேஷ்பாபு, சமந்தா, காஜல் அகர்வால், ப்ரிணிதா சுபாஷ், சத்யராஜ், ரேவதி, ஜெயசுதா, சரண்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.