close
Choose your channels

அஜித்தின் 'விவேகம்' தமிழ்படமா? ஹாலிவுட் படமா?

Sunday, March 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடையவுள்ள நிலையில் இந்த படத்தில் ஏகப்பட்ட வெளிநாட்டு கலைஞர்கள் பணியாற்றி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் கதை வெளிநாட்டில் நடைபெறுவது போன்று இருப்பதால் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில்தான் படமாக்கப்பட்டுள்ளது. எனவே காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் சிவா, பல ஐரோப்பிய கலைஞர்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய துணை நடிகர்கள், சண்டைக் கலைஞர்களும், இந்த படத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தை பார்க்கும்போது இது தமிழ்ப்படமா? அல்லது ஹாலிவுட் படமா? என்று தோன்றும் அளவுக்கு இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி காட்சி அமைப்புகளும் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டு வருவதால் இந்த படம் தமிழ் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'விவேகம்' படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.