close
Choose your channels

மகேஷ்பாபு - விஜய்சேதுபதி ரசிகர்களை மெர்சலாக்கும் விஜய்

Monday, September 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முற்றிலும் முடிந்துவிடும் நிலையில் இந்த படத்தின் டீசர் இயக்குனர் அட்லியின் பிறந்த நாளான வரும் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் வரும் ஆயுதபூஜை தினமான செப்டம்பர் 29ஆம் தேதி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 'கருப்பன்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களின் இடைவேளையில் 'மெர்சல்' திரைப்படத்தின் டீசர் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் மகேஷ்பாபு, விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு கிடைத்த கூடுதல் போனஸ் ஆக கருதப்படுகிறது.

வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் 'மெர்சல் திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படம் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் 100வது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.