close
Choose your channels

அஜீத் வழியில் செல்லும் சிம்பு!

Saturday, July 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத்தின் வெறித்தனமான ரசிகர் சிம்பு என்பது கோலிவுட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். அஜீத் நடித்த படங்கள் ரிலீஸாகும் தினத்தில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு ரசிகராக சிம்புவும் சேர்ந்து பார்த்து ரசிப்பார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான 'வாலு' டிரைலரில் கூட 'எத்தனை அஜீத் படம் பார்த்திருப்போம்' என்ற டயலாக்கையும் சேர்த்திருப்பார்.

அதுமட்டுமின்றி இயக்குனர் கவுதம் மேனன், சிம்புவை வைத்து 'அச்சம் என்பது மடமையடா' படத்தை எடுத்து கொண்டிருக்கும்போது திடீரென அஜீத்தின் 'என்னை அறிந்தால்' படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தபோது, தன்னுடைய கால்ஷீட்டை கவுதம்மேனனுக்கு அஜீத்துக்காக மாற்றி கொடுக்க சம்மதித்தார்.

இந்நிலையில் விரைவில் வெளிவரவுள்ள 'வாலு' திரைப்படத்திற்காக எம்.ஜி.ஆர், அஜீத் மற்றும் ரஜினியை போன்ற தோற்றத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். அந்த பாடலில் சிம்பு, அஜீத்தின் டிரேட் மார்க் லுக்கான சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தோன்றவுள்ளதாக தற்போது தகவல்கள் வந்துள்ளது. அஜீத்தின் தீவிர ரசிகரான சிம்பு, அஜீத் ஹேர் ஸ்டைல்தோற்றமளிக்க விரும்புவதில் ஆச்சரியம் இல்லை தானே.....

மேலும் இதே பாடலில் எம்.ஜி.ஆர் அவர்கள் அணியும் உடைபோன்ற உடைகளும் சிம்புவுக்காக தயார் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் நடனம் ஆடும் பாணியையும் சிம்பு பின்பற்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வாலு' படத்தில் இந்த பாடல் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.