close
Choose your channels

'மொட்டசிவா கெட்டசிவா' படப்பிடிப்பு ஆரம்பம்

Thursday, November 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான 'காஞ்சனா 2' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள திரைப்படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது.

தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'பட்டாஸ்' படத்தின் ரீமேக் படமான 'மொட்டசிவா கெட்ட சிவா' படத்தில் நாயகியாக 'டார்லிங்' நாயகி நிகில்கல்ராணி, மற்றும் சதீஷ், தம்பி ராமய்யா, மனோபாலா, கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் ராகவா லாரன்ஸ் படத்தில் முதல்முதலாக சத்யராஜ் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. லாரன்ஸ் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் கோவை சரளா மற்றும் ஸ்ரீமன் ஆகியோர்களும் போலீஸாக நடிக்கவுள்ளனர்.

'சிங்கம் புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சாய்ரமணி இயக்கும் இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. சென்னையில் தொடர்ந்து 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அதன்பின்னர் ஹாங்காங், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.