close
Choose your channels

பிரபல டிவி தொகுப்பாளினி - பிரபுசாலமன் நாயகன் நிச்சயதார்த்தம்

Thursday, November 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவி மற்றும் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் அஞ்சனாவுக்கும் நடிகர் சந்திரனுக்கு வரும் 29ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' படத்தில் நாயகனாக நடித்தவர் நடிகர் சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் சந்திரன் விருது வாங்கியபோது, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அஞ்சனா, மறுநாள் சந்திரனுக்கு டுவிட்டருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அதற்கு நன்றி கூறிய சந்திரன் பின்னர் டுவிட்டரின் மூலமே நெருக்கமானதாகவும் கூறப்படுகிறது. தங்களுடை காதலுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது டுவிட்டரே என சந்திரன் கூறியுள்ளார்.

வரும் 29ஆம் தேதி சென்னையில் நிச்சர்யதார்த்தம் நடைபெறவுள்ளது. மேலும் இவர்களது திருமணம் வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் டைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.