close
Choose your channels

ரஜினியின் 'காலா' படத்தில் இணைந்த நட்சத்திர பட்டாளங்கள்

Monday, May 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷின் தயாரிப்பில் உருவாகும் 'காலா கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்களை வொண்டர்பார் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கறுப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா' ஆகியோர் நடிக்கின்றனர்.

பாலிவுட் பிரபலம் நானா படேகர் உள்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கி தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும் என்றும் அதன் பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் தெரிகிறது. இரண்டு மாதத்தில் படப்பிடிப்பை முழுவதும் முடித்துவிட்டு அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் ஈடுபட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.