close
Choose your channels

நயன்தாராவின் 'அறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, September 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வந்த 'அறம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'அறம்' படம் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள இந்த படத்தை மீஞ்சூர் கோபி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் விக்னேஷ், ரமேஷ், சுனுலட்சமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.