close
Choose your channels

சரவணா ஸ்டோர் விளம்பரப் படத்தில் ஓவியா?

Friday, September 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் புகழ் ஓவியாவின் அடுத்த படம் எது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஆயினும் ஓவியா ஆர்மியினர் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது உண்மை.

இந்த நிலையில் 'சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடிக்க ஓவியா ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அவருடன் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் ஆடிப்பாடி நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 

ஏற்கனவே ஹன்சிகா, தமன்னாவுடன் விளம்பரப்படங்களில் நடித்த சரவணன், தற்போது தீபாவளிக்காக தயாரிக்கப்படும் புதிய விளம்பர படத்தில் ஓவியாவுடன் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக ஓவியாவுக்கு ஒரு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஓவியாவை திரையில் பார்த்தால் போதும், அது திரைப்படமாக இருந்தாலும் சரி, விளம்பர படமாக இருந்தாலும் சரி என்று காத்திருக்கும் ஓவியா ஆர்மியினர்களுக்கு நிச்சயம் இது இனிக்கும் செய்தியாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.