close
Choose your channels

உலகின் மிக அழகான பெண்கள் பட்டியலில் விஜய் நாயகிக்கு 2வது இடம்

Tuesday, April 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவை மையமாக கொண்ட பஜ்நெட் என்ற அமைப்பு உலகின் மிக அழகான பெண்கள் குறித்த பட்டியல் ஒன்றை தயார் செய்து அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த பட்டியலில் முதலிடைத்த பிடித்துள்ளார் பிரபல பாப் பாடகி பியான்ஸ் (Beyonce)

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளவர் பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்த்தக்கது. அதுமட்டுமின்றி கடந்த 2000ஆம் ஆண்டில் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் 3வது இடத்தில் டெய்லர் ஹில், 4வது இடத்தில் எம்மா வாட்சன், 5வது இடத்தில் டாக்கட்டோ ஜான்சன், 6வது இடத்தில் ஹிலாரி கிளிண்டன், 7வது இடத்தில் மார்கட் ரூபி, 8வது இடத்தில் ஏஞ்சலினா ஜோலி, 9வது இடத்தில் பஹிரியோ ஏவ்சென், மற்றும் 10வது இடத்தில் அலெக்ஸ்டாண்ட்ரோ டாட்ரியோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இந்த பட்டியலில் 21வது இடத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.