close
Choose your channels

விஜய் சீனியர் நடிகர் இல்லை. ஹன்சிகா

Thursday, August 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்யுடன் வேலாயுதம், புலி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஹன்சிகாவிடம் சமீபத்தில் 'சீனியர் நடிகரான விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து கேள்வி கேட்டபோது 'யார் சீனியர் நடிகர்? என்று கோபமடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் ஹன்சிகா கூறியதாவது, "விஜய்யை நான் சீனியர் நடிகர் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவருடன் இரண்டு படங்கள் நடித்துவிட்டேன். ஆனால் அவர் இன்னும் ஒரு புதுமுகம் போலவே இளமையாக இருக்கின்றார். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் எனக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்படுகிறது. அவருடைய இளமை ரகசியம் குறித்து அவரிடம் அடிக்கடி நான் கேட்டுள்ளேன்' என்று கூறியுள்ளார்.

'புலி' படத்தின் இளவரசியாக நடித்துள்ள ஹன்சிகா, இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். வரும் அக்டோபர் 1ஆம் தேதி 'புலி' படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.