close
Choose your channels

விஜய் வில்லனுக்கு ஜோடியான மணிரத்னம் நாயகி

Thursday, August 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'180' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நித்யா மேனன், அதன் பின்னர் வெப்பம், 'மாலினி 22 பாளையங்கோட்டை' ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 'ஓகே கண்மணி. இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கிய 'காஞ்சனா 2' படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் நித்யாமேனன், சமீபத்தில் சூர்யா நடிப்பில் விக்ரம்குமார் இயக்குமர் '24' படத்திலும் இணைந்தார் என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இந்த படத்தில் ஏற்கனவே சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து கொண்டிருக்கும் நிலையில் நித்யாமேனனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அவர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிவரும் கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'புலி' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த சுதீப், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார். அவருக்கு ஜோடியாக நடிக்கத்தான் நித்யாமேனன் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு இசையமைக்க டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மணிரத்னம், ராகவா லாரன்ஸ், விக்ரம் குமார், கே.எஸ்.ரவிகுமார் என அடுத்தடுத்து பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்று வரும் நித்யா மேனனுக்கு உண்மையிலேயே இந்த 2015ஆம் வருடம் அதிர்ஷ்டம் நிறைந்த வருடமாகவே கருதப்படுகிரது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.