close
Choose your channels

டோலிவுட் செல்கிறது 'போகன்'. ஜெயம் ரவி, அரவிந்தசாமி கேரக்டரில் நடிக்க போவது யார்?

Saturday, March 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா நடிப்பில் லட்சுமண் இயக்கிய 'போகன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஜெயம் ரவிக்கு இன்னொரு வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தமிழில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் லட்சுமண், தெலுங்கிலும் இந்த படத்தை இயக்கவுள்ளார்

தமிழில் ஜெயம் ரவி நடித்த கேரக்டரில் ரவிதேஜா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இன்னொரு பவர்புல் கேரக்டரான அரவிந்தசாமி கேரக்டரில் அவரே நடிக்கவில்லை என்றும், அந்த கேரக்டருக்காக பிரபல நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஹன்சிகா கேரக்டரில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகை ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது

மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் தமிழில் இருந்தது போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்றும் தெலுக்கு ரசிகர்களுக்கு இந்த கிளைமாக்ஸ் ஆச்சரியம் தரவைக்கும் அளவுக்கு இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.