close
Choose your channels

சிம்புவின் அடுத்த படத்தில் தேசிய விருது பெற்ற டெக்னீஷியன்

Thursday, August 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அழகானவன்' படத்திற்கு பின்னர் அவருடைய அடுத்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டதை ஏற்கனவே பார்த்தோம். டி.ராஜேந்தர் தயாரிப்பில், யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்தை சிம்பு நடித்து இயக்குகிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் 11 முறை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார். மணிரத்னம் இயக்கிய 'தளபதி', ரோஜா, 'இருவர்' உள்பட பல வெற்றி படங்களில் பணியாற்றி இவர் முதன்முதலாக சிம்பு படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.
மேலும் இந்த படத்தின் எடிட்டராக ஆண்டனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.