close
Choose your channels

'வேலைக்காரன்' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

Thursday, June 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அஜித், விஜய் ரசிகர்களை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை சமூக வலைத்தளங்களில் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டதாகவும், இன்னும் 10 நாட்களுக்கு பேட்ச்வொர்க் பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும் அதன் பின்னர் முழு வேகத்தில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் 'வேலைக்காரன்' படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் வெளியீடு என அடுத்தடுத்த அறிவிப்புகளும் மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.