ரஜினி-ரஞ்சித் படம் தொடங்குவது எப்போது?
Thursday, February 16, 2017 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை அடுத்து 'கபாலி' புகழ் ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதும், இந்த படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதையை இயக்குனர் ரஞ்சித் இன்னும் ஒருசில வாரங்களில் முடித்துவிடுவார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், லொகேஷன் பார்க்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News