close
Choose your channels

சிம்புவுக்கு திருமணம் நடக்க திருப்பதியில் வழிபாடு!

Friday, September 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சிம்பு தற்போது ஆங்கில படம் ஒன்றில் நடிப்பதில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் அவருக்கு 34 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. அவருடைய பெற்றோர்கள் சிம்புவுக்கு பொருத்தமான பெண் பார்த்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, 'என் மகன் சிலம்பரசனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக திருப்பதியில் வழிபாடு செய்ய வந்தேன். சிம்புவுக்கு நான் பெண் பார்ப்பதைவிட அவரே பார்த்தால், அந்த பெண் தங்கமான பெண்ணாகவும், ஐஸ்வர்யமான பெண்ணாகவும் இருப்பார்.

சிம்புவுக்கு மட்டுமின்றி இளையமகன் குறளரசனுக்கு திரையுலகில் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்றும் அவருக்கும் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றும் இறைவனிடம் கோரிக்கை வைக்கவே திருப்பதிக்கு வந்துள்ளேன்' என்று டி.ராஜேந்தர் தெரிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.