close
Choose your channels

சூர்யாவுக்கு 25வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய விக்னேஷ் சிவன்

Sunday, July 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சூர்யா இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு குடும்பத்தினர்களும், நண்பர்களும் திரையுலகினர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். சூர்யாவுக்கு எங்களுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களையும் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த நிலையில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, சூர்யாவுக்கு 25வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சூர்யாவுக்கு 42 வயது ஆனாலும், அவர் இன்னும் 25 வயது இளைஞனை போல உள்ளதால் அப்படி கூறினாரா? அல்லது 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா 25 வயது இளைஞனாக நடிப்பதை மறைமுக கூறுகிறாரா? என்பது தெரியவில்லை.

மேலும் இன்று இந்த படத்தில் புதிய ஸ்டில் ஒன்று வெளியாகவிருப்பதாகவும் அது தன்னுடைய ஃபேவரேட் என்றும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். இதனால் சூர்யாவின் ரசிகர்களுக்கு இன்றும் ஒரு விருந்து காத்திருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.