close
Choose your channels

25 படங்களுக்கு பின்னர் விஜய்சேதுபதிக்கு கிடைக்கும் முதல் அனுபவம்

Sunday, August 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் அதிக படங்களில் நடித்து கொண்டிருப்பவர் என்ற பெருமையை கடந்த இரண்டு ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டிருக்கும் நடிகர் விஜய்சேதுபதி என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் 'கருப்பன்', 'அநீதிக்கதைகள்', '96', 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', 'சீதக்காதி', 'புரியாத புதிர் என அரைடஜன் படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் 'ஜங்கா'. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

விஜய்சேதுபதி 'டான்' ஆக நடிக்கும் இந்த காமெடி படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு பாரீஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதில் ஒரு விசேஷம் என்னவெனில் இதுவரை 25க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள விஜய்சேதுபதி, இதுவரை பாடல் காட்சிகளுக்கு மட்டுமே வெளிநாடு சென்றுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தான் அவரது முதல் வெளிநாட்டு வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதிக்கு நிச்சயம் இது வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கும்.

சித்தார்த் விபின் இசையில், ராஜூசுந்தரம் நடன இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.