close
Choose your channels

அஜித் பிறந்த நாளில் விஜய் தரும் விருந்து

Monday, November 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு கொட்டும் மழையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தீபாவளிக்கு முன்பே 70% முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் 'விஜய் 59' படக்குழு விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கோவா செல்லவுள்ளனர்.

இந்நிலையில் 'விஜய் 59' படத்தின் ரிலீஸ் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இருக்கும் என ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தையும் தயாரித்து வருவதால், 'கபாலி' படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே 'விஜய் 59' திரைப்படம் 15 நாள் இடைவெளியில் அதாவது மே மாதம் 1ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த தினம் அஜீத்தின் பிறந்த நாள் என்பதும், உழைப்பாளர் தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜீத் பிறந்த நாளில் விஜய் தன் ரசிகர்களுக்கு 'விஜய் 59' என்ற திரைவிருந்தை அளிக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.