close
Choose your channels

'10 எண்றதுக்குள்ள' படத்தின் அதிகாரபூர்வ டீஸர் ரிலீஸ் தேதி

Monday, August 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ஐ' படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ராஜஸ்தானில் நடைபெறவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் ரயில் சண்டைக்காட்சிகள் உள்பட பல த்ரில்லிங் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்ற செய்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிவந்தது. இதில் தற்போது ஒரு சிறுமாற்றம் ஏற்பட்டுள்ளது.


இந்த படத்தில் விக்ரம் ஜோடியாகவும், இரண்டு வேடங்களிலும் நடித்திருக்கும் நாயகி சமந்தா சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் '10 எண்றதுக்குள்ள' படத்தி டீஸர் வெளியீடு வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதன்படி வரும் வியாழக்கிழமை இந்த படத்தின் டீசர் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் விக்ரம் மற்றும் சமந்தா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

விக்ரம், சமந்தா, பசுபதி, ஜாக்கி ஷெராப், மனோபாலா மற்றும் சார்மி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'கோலிசோடா' இயக்குனர் விஜய் மில்டன் இயக்கியதோடு மட்டுமின்றி ஒளிப்பதிவும் செய்துள்ளார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு அந்தோணி படத்தொகுப்பு செய்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே தயாரிப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.