close
Choose your channels

2 முக்கிய பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து கூறிய கோஹ்லி

Wednesday, March 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தாலும் நேற்று பெங்களூரில் முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் உற்சாகத்தில் கேப்டன் விராத் கோஹ்லி இன்று தனக்கு நெருக்கமான இரண்டு முக்கிய பெண்களுக்கு தனது சமூக வலைத்தளத்தில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விராத் கோஹ்லியிடம் வாழ்த்து பெற்ற ஒருவர் அவருடைய தாய் சரோஜ் கோலி மற்றும் இன்னொருவர் கோஹ்லியின் காதலி என்று கூறப்படும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா.

வாழ்க்கையில் கடினமான காலங்களில் தனது குடும்பத்தை பொறுப்புடன் கவனித்த என் அம்மாவுக்கும், அதிகப்படியான முரண்பாடுகளுக்கு எதிராக போராடி, நீதியின் பக்கம் நிற்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள் என்று கோஹ்லி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.