close
Choose your channels

'விசாரணை'க்கு கிடைத்த மேலும் ஒரு விருது

Monday, April 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் தேசிய விருது உள்பட பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.


2016ஆம் ஆண்டிற்கான 'Indian Film Festival of Los Angeles' என்ற விருது வழங்கும் விழா ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெற்றது. இதில் விசாரணை திரைப்படத்தை சிறந்த படமாக தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இந்த விருது இந்த படத்திற்கு கிடைத்த மேலும் ஒரு கிரீடமாக கருதப்படுகிறது.


தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்பட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் விருதுகளை மட்டுமின்றி வசூலையும் குவித்தது. அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் இந்த படத்தை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.