close
Choose your channels

விஷாலின் 'துப்பறிவாளன்' ரிலிஸ் தேதி

Sunday, April 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கி வரும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக விஷால்-மிஷ்கின் இணைந்துள்ள இந்த விறுவிறுப்பான த்ரில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ளதாக கூறப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது சுதந்திர தின விடுமுறை நாளை ஒட்டி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

விஷால், விஜய், பிரசன்னா, அனுஇமானுவேல், ஆண்ட்ரியா, கே.பாக்யராஜ் மற்றும் சிறப்பு வேடத்தில் மிஸ்கின் நடித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.