close
Choose your channels

14 நிமிடங்களில் ரெடியான போட்டோபிளக்ஸ். தல ரசிகர்களின் கெத்து

Thursday, April 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டாவது ஸ்டில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

நேற்று நள்ளிரவு சரியாக 12.01க்கு வெளியான இந்த புதிய ஸ்டில்லை வெறும் 14 நிமிடங்களில் அஜித் ரசிகர்கள் போட்டோபிளக்ஸ் ஆக தயார் செய்து அந்த நள்ளிரவிலும் சுவற்றில் ஒட்டி கெத்தை காட்டியுள்ளனர்.

இந்த போட்டோ பிளக்ஸை மதுரை அஜித் ரசிகர்கள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதால்தான் அஜித் படம் வெளியாகும் தினம் சாதாரணமான தினமாக இல்லாமல் திருவிழா தினம்போல் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.