close
Choose your channels

ஒரே வாரத்தில் '2.0' செய்த வசூல் சாதனை: லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு

Thursday, December 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இதுவரை எத்தனையோ படங்கள் வெளியாகியும் இதுவரை எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் தாங்கள் தயாரித்த படங்களின் வசூல் தகவல்களை அதிகாரபூர்வமாக அறிவித்ததே இல்லை. டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சினிமா டிராக்கர்கள் என்ற போர்வையில் உள்ளவர்கள் மட்டுமே படங்களில் வசூல் குறித்த தகவல்களை மிகைப்படுத்தி கூறி வந்தனர்.

இந்த நிலையில் முதல்முறையாக லைகா நிறுவனம் தான் தயாரித்த '2.0' திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் ரூ.400 கோடி என அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதுமட்டுமின்றி இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் ரூ.500 கோடி வசூல் செய்துள்ளதாக சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

ஒரு நேரடி தமிழ்ப்படம் ரூ.500 கோடி கிளப்பில் இணைந்திருப்பது தமிழ் சினிமா சரித்திரத்தில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், லைகா, என இந்திய சினிமாவின் முன்னணி கலைஞர்கள் பணிபுரிந்த இந்த படம் விரைவில் சீனாவிலும் வெளியாகவுள்ளதால் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.