close
Choose your channels

கொரோனா பாதிப்பில் கமல்: 'விக்ரம்' படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Tuesday, November 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்டது என்பதும், அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல்நலம் படிப்படியாக தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற திட்டமிட்டு இருந்ததாகவும் இந்த படப்பிடிப்பின்போது ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சியை படமாக்க இயக்குனர் அனைத்து பணிகளையும் தயார் நிலையில் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பில் இருக்கும் நிலையில் அவர் குணமாகி வந்தாலும் வெளிப்புற படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் பொள்ளாச்சியில் படமாக்க திட்டமிட்ட சண்டை காட்சியை பின்னி மில்லில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது பின்னி மில்லில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.