close
Choose your channels

கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற பூஜா ஹெக்டேவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம்!

Sunday, May 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேன்ஸ் திரைப்பட விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ள சென்ற நடிகை பூஜா ஹெக்டேவுக்கு அதிர்ச்சி அனுபவம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அழைப்பு வந்ததை அடுத்து சமீபத்தில் அவர் கேன்ஸ் சென்று இருந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு திடீரென அதிர்ச்சி அனுபவம் ஒன்று கிடைத்துள்ளது.

பூஜா ஹெக்டே தனது விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் மேக்கப் பொருட்களை வைத்து இருந்த சூட்கேஸ் திடீரென காணாமல் போனதால் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு பிடிப்பதற்கு அவருடைய மேக்கப்மேன்கள் மற்றும் உதவியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மாற்று உடை கூட இல்லாமல் தவித்த பூஜாவுக்கு கேன்ஸ் பயணம் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி அனுபவமாக இருந்தது.

ஆனால் அதே நேரத்தில் அவர் எடுத்துச் சென்ற தங்க வைர நகைகளை சூட்கேசில் வைக்காமல் அவர் கழுத்தில் அணிந்து இருந்ததால் அவை தப்பித்தது என்பதால் பூஜா ஹெக்டே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.