அபிராமி திரையரங்க உரிமையாளருக்கு மத்திய அரசு செய்த கெளரவம்!
இந்தியாவில் சாதனை செய்த பலரது உருவம் பதித்த தபால் தலைகள் அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில் தற்போது சென்னை அபிராமி திரையரங்க உரிமையாளர் ராமநாதன் அவர்களின் உருவம் பதித்த 5 ரூபாய் தபால் தலையை வெளியிட்டு அவருக்கு மத்திய அரசு கெளரவம் செய்துள்ளது
ஏழை எளியோர் பயனடையும் வகையில் நூற்றுக்கணக்கான மருத்துவ மையங்களை அமைத்து உதவி செய்து வருபவர் சென்னை அபிராமி திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதன். இவரது உருவம் பதித்த ரூபாய் 5 மதிப்புள்ள அஞ்சல் தலையை வெளியிட்டு மத்திய அரசு கெளரவம் செய்துள்ளதை அடுத்து திரையுலகினர், ரோட்டரி சங்கத்தினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கலைமாமணி பட்டம் வென்ற திரையரங்கு உரிமையாளர் அபிராமி இராமநாதன் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஏழை எளியோர் பயன்பாட்டுக்கு பல மருத்துவ மையங்களை அமைத்து உதவி செய்து வருகிறார். மேலும் அவர் கலைச்சேவை, ஆன்மீக சேவை, ரோட்டரி சங்க சேவை, மருத்துவ சேவை என எண்ணற்ற சேவையை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது