close
Choose your channels

தமிழ் நடிகர் இயக்கிய படத்திற்கு கனடாவில் கிடைத்த கெளரவம்!

Tuesday, September 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’தீரன் அதிகாரம் ஒன்று’, ’தேவராட்டம்’ உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் போஸ் வெங்கட் முதல் முறையாக இயக்கிய திரைப்படம் ’கன்னிமாடம்’. ஆணவ கொலைகள் குறித்த இந்த திரைப்படம் லாக்டவுனுக்கு முன்னரே ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பா.ரஞ்சித் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த படம் தற்போது கனடாவில் உள்ள டொரண்டோவில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்படுள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் அறிவித்துள்ளார்.

கனடா தலைநகர் டொரண்டோவில் செப்டம்பர் 11 முதல் 13 வரை சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடைபெறவுள்ளது என்பதும், இதில் தமிழ் நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய முதல் படமே கலந்து கொள்ளவுள்ளது பெருமைக்குரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.