close
Choose your channels

விஜய்யின் 'கோட்' படத்தில் இணைந்துள்ளாரா இந்த பிரபல ஹீரோ? இன்ஸ்டா பதிவால் பரபரப்பு..!

Saturday, January 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் நடித்து வருகிறது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது தமிழ் திரை உலகின் ஹீரோ ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவரே தனது இன்ஸ்டாவில் பதிவில் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் உருவான ’பகவதி’ என்ற திரைப்படத்தில் விஜய்யின் தம்பியாக ஜெய் நடித்திருந்தார். இந்த நிலையில் ‘கோட்’ படத்தில் ஜெய் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது

இந்த நிலையில் சற்றுமுன் ஜெய் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் விஜய்யின் ஸ்டில் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த ஸ்டில்லை பார்த்த ரசிகர்கள் ‘கோட்’ போர் படத்தில் இணைந்து உள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக ஜெய் இந்த படத்தில் நடிப்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’சென்னை 28’ ’சரோஜா’ ’கோவா’ ’பிரியாணி’ ’மாஸ் என்கிற மாசிலாமணி’ ’பார்ட்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்திலாவது நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.