close
Choose your channels

தொழிலதிபர் மகளை மணக்கும் 'விக்ரம் வேதா' நடிகர்

Friday, March 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இசையமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷ் தயாரித்த 'மதயானை கூட்டம்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கதிர். இந்த படத்திற்கு பின்னர் அவர் கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் சத்ரு, பரியேறும் பெருமாள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நடிகர் கதிருக்கும் ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளான சஞ்சனாவுக்கும் வரும் 4ஆம் தேதி ஈரோட்டில் திருமணம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மணமகள் சஞ்சனா பிசினஸ் படிப்பில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோட்டில் நடைபெறும் கதிர்-சஞ்சனா திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களும், சென்னையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரமுகர்களும் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் நடிகர் கதிருக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.