close
Choose your channels

'தலைவர் 169' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த ரெடின்கிங்ஸ்லே!

Wednesday, June 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் நெல்சன் படம் என்றாலே அந்த படத்தில் ரெடின்கிங்ஸ்லே இருப்பார் என்பதைச் சொல்லவே தேவையில்லை. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 169’ படத்திலும் ரெடின்கிங்ஸ்லே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரெடின்கிங்ஸ்லே, ரஜ்னியின் ‘தலைவர் 169’ படத்தில் நீங்கள் நடிக்கின்றீர்களா? என்ற கேள்விக்கு ’நெல்சன் இப்போதுதான் திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறார், முதல் பாதி தான் எழுதி முடித்திருக்கிறார். வெறித்தனமாக அவர் அந்த பணியில் ஈடுபட்டு வருவதால் அதன் பின்னர் தான் எந்தெந்த கேரக்டரில் யார் யார் நடிப்பார்கள் என்பதை அவர் முடிவு செய்வார் என்று கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் வெளியான ’விக்ரம்’ படத்தை முதல் நாள் முதல் நாளே தான் பார்த்ததாகவும் தமிழ் சினிமாவே கொண்டாட வேண்டிய ஒரு படம் என்றும் கூறினார். மேலும் தான் ஒரு கமல் ரசிகர் என்றும் பழைய ’விக்ரம்’ படம் வந்தபோது சத்யம் தியேட்டரில் ராக்கெட் கட்டவுட் எல்லாம் நாங்கள் வைத்தோம் என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

மேலும் தற்போது ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘காபி வித் காதல்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருவதாகவும் அனைத்து படங்களிலும் காமெடி கேரக்டரில் நடித்து வருவதாகவும் மக்களுக்கு பிடிக்கும் வகையில் காமெடி செய்வதே தனது விருப்பம் என்றும் அந்த பேட்டியில் ரெடின்கிங்ஸ்லே கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.