close
Choose your channels

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் விஜய் பட வில்லன்!

Friday, April 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் மலையாளம் மற்றும் கன்னடம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் கன்னடம் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் விஜய் நடித்த ’புலி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல கன்னட தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சுதீப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியதால் ஒரு வாரம் மட்டும் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராகிவிட்டதை அடுத்து மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார். இதனால் பிக்பாஸ் கன்னட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.