close
Choose your channels

'இறுதிச்சுற்று' படம் குறித்த வெளிவராத முக்கிய தகவல்

Thursday, January 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐந்து வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தமிழில் மாதவன் நடித்துள்ள 'இறுதிச்சுற்று' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே இந்த படத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.


தமிழில் 'இறுதிச்சுற்று' மற்றும் இந்தியில் Saala Khadoos என்ற பெயரில் ரிலீசாகும் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், தெலுங்கு ரீமேக்கில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், மாதவன் கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் இந்த ரீமேக் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

மாதவன், ரித்திகாசிங், நாசர், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுதா என்ற பெண் இயக்குனர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.