close
Choose your channels

இயற்கை ரொம்ப அழகு… டிராவலிங் வீடியோவை வெளியிட்ட தமிழ் இளம் நடிகை!

Thursday, March 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹிப்பாப் ஆதி நடிப்பில் வெளியாகி கடந்த 2017 இல் ஹிட் அடித்த திரைப்படம் “மீசையை முறுக்கு“. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. மேலும் அறிமுகமான முதல் படத்திலேயே நடிகை ஆத்மிகா பெரும்பாலான தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து இருந்தார். இந்த அளவிற்கு வரவேற்பை பெற்ற அவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது.

ஆனால் பெரிய அளவிலான வாய்ப்பு இல்லாத நடிகை ஆத்மிகா, இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “நரகாசூரன்“, “காட்டேரி“, “கண்ணைநம்பாதே“ போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஆத்மிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோ அவர் டிராவலிங் செய்வது போல அமைந்து இருக்கிறது.

சமீபத்தில் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் வைல்ட் விலங்குகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் படு வைரலானது. அந்த வகையில் நடிகை ஆத்மிகாவும் தற்போது டிராவலிங் செய்யும் வீடியோவை வெளியிட்டு “எப்போதும் நீங்கள் செல்லும் பாதையில் சற்று நிறுத்திப் பாருங்கள். இயற்கை ரொம்ப ஆச்சர்யமானது“ எனத் தெரிவித்து உள்ளார்.

அந்த வகையில் மான்கள் துள்ளிக் குதித்து விளையாடுவது போல இருக்கும் ஒரு சாலையில் நடிகை ஆத்மிகா பயணம் செய்யும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.