close
Choose your channels

ஹாலிவுட்டுக்கு செல்லும் கோலிவுட் நடிகை

Wednesday, March 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் இருந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி வருகிறது. பாலிவுட்டில் இருந்து தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகிய நடிகைகளும், கோலிவுட்டில் இருந்து தனுஷும் ஹாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது மற்றொரு கோலிவுட் நடிகையான அபிநயா ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


சமுத்திரக்கனி இயக்கிய 'நாடோடிகள்' படத்தில் அறிமுகமான மாற்றுத்திறனாளி நடிகையான அபிநயா, அதன்பின்னர் பல படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது 'One Little Finger' என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை Rupam Sarmah என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர் என்பதும், கின்னஸ் சாதனை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'One Little Finger'படத்தில் அபிநயா பவர்புல்லான கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளதாகவும், இந்த படத்தில் மொத்தம் 56 மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ளதாகவும் அவர்களில் அபிநயாவும் ஒருவர் என்றும் அபிநயாவின் தந்தை ஆனந்தன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு செல்லும் அபிநயாவுக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.