close
Choose your channels

சூர்யாவின் '24' டீசர் விமர்சனம்

Wednesday, March 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதன்முதலாக சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள '24' படத்தின் டீசர் வரும் வெள்ளியன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளநிலையில் நமக்காக படக்குழுவினர் டீசரின் சிறப்புக்காட்சியை திரையிட்டு காட்டியுள்ள நிலையில் படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டு இந்தடீசர் விமர்சனத்தை ஆரம்பிக்கின்றோம்.

ஒரு நிமிடம் எட்டு வினாடிகள் ஓடும் இந்த டீசரில் சூர்யா மூன்றுவிதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். முதன்முதலாக சூர்யா அசுரத்தனமான வில்லன்கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் ஒரு வயதான கேரக்டரும், இளமையான கேரக்டர் என சூர்யாவின் கேரக்டர்கள் அமைந்துள்ளது. இந்த இரண்டுவேடங்களும் தந்தை-மகன் கேரக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டீசரில் இருந்து விஞ்ஞானி கெட்டப்பில் குறுந்தாடியுடன் வரும் சூர்யாவின் பெயர் ஆத்ரேயா என்றும், அவர்தான் இந்த படத்தின் வில்லன் என்பதும்தெரிய வருகிறது. மேலும் வில்லன் சூர்யாவும், வயதான சூர்யாவும் டுவின்ஸ் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. "ஒரு கருவறையில் உதித்தோம்.... ஒரு சிலநொடி இடைவெளியில் ஜனித்தோம்" என்ற வசனம் டீசரின் ஆரம்பத்தில் ஒலிக்கின்றது. இதிலிருந்தே இருவரும் டுவின்ஸ் இருக்கலாம் எனயூகிக்கப்படுகிறது.

மேலும் வயதான சூர்யாவுக்கு நித்யாமேனனும் இளமையான சூர்யாவுக்கு சமந்தாவும் ஜோடிகளாக நடித்துள்ளனர். சூர்யாவின் மூன்று கேரக்டர்களும்குறிப்பாக வில்லன் ஆத்ரேயா கேரக்டர் சூர்யாவின் நடிப்புக்கு சரியான தீனி போட்டுள்ளதால் இந்த கேரக்டர் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெருவிருந்தாகஇருக்கும் என்பது மட்டும் உறுதி.


இந்த டீசரில் அமைந்துள்ள மற்றொரு சிறப்பம்சம் ஏ.ஆர்.ரஹ்மானின் அபாரமான பின்னணி இசை. குறிப்பாக டீசர் முடியும் கடைசி வினாடியில் ரஹ்மான்அமைத்துள்ள இசை ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.

திரு என்கிற திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு, பர்வின் புடியின் கச்சிதமான எடிட்டிங், சூர்யாவின் பெர்மான்ஸ், விக்ரம் குமாரின் வித்தியாசமானகதையம்சத்துடன் கூடிய இயக்கம் ஆகியவை தமிழ் சினிமாவுக்கு இந்த படம் முற்றிலும் புதிது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் காட்சிகளில்உள்ள தரத்தை பார்க்கும்போதே இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கண்டிப்பாக இந்த படம்சூர்யாவின் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையான படமாக இருக்கும் என்பதை 100% அடித்து சொல்லலாம். விக்ரம்குமார் குழுவினர்களுக்கு நமது வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.