close
Choose your channels

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஜோதிகாவின் சகோதரி.. வைரல் புகைப்படங்கள்..!

Sunday, March 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவின் சகோதரி நக்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகையும் அரசியல்வாதியுமான நக்மா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாட்ஷா’ உள்பட பல வெற்றி படங்களில் நடித்த நிலையில் தற்போது அரசியலில் பிஸியாக இருக்கும் அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை நக்மா பிரபுதேவா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’காதலன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் ரஜினிகாந்த் நடித்த ’பாட்ஷா’ சரத்குமார் நடித்த ’ரகசிய போலீஸ்’ சத்யராஜ் நடித்த ’வில்லாதி வில்லன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இதனை அடுத்து கடந்த 2004 ஆம் ஆண்டு அரசியலில் சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுமார் 20 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக நடிகை நக்மா அகில இந்திய மகிளாகாங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அரசியலில் பிஸியாக இருக்கும் நக்மா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட நிலையில் அது குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். திரைப்படங்களில் பார்த்த நக்மாவுக்கும் தற்போது பார்க்கும் நக்மாவுக்கும் அதிக வித்யாசம் இருப்பதாக இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.