close
Choose your channels

சேலை அணிந்து கிரிக்கெட் விளையாடிய அஞ்சலி.. என்ன ஒரு பேட்டிங்...

Friday, October 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அஞ்சலி சேலை அணிந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அஞ்சலி அதன்பின் ’அங்காடி தெரு’ ’மங்காத்தா’ ’அரவான்’ ’சேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அஞ்சலி அதில் தனது கிளாமரான புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவருக்கு ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் நடிகை அஞ்சலி சேலை அணிந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ’என்ன ஒரு பேட்டிங்’ என ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.