close
Choose your channels

நடிகை அசின் மகளா இவர்? எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்கள்!

Friday, July 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அசின். இவர் ஜெயம் ரவி நடித்த ’எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் சூர்யாவுடன் கஜினி, விக்ரமுடன் மஜா, விஜய்யுடன் சிவகாசி, போக்கிரி, அஜித்துடன் வரலாறு மற்றும் கமல்ஹாசனுடன் ’தசாவதாரம்’ என பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் அசின் ஒரு சில திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை அசின் கடந்த 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2017 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது என்பதும் அந்த குழந்தைக்கு அரின் என்று பெயர் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை அசின் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ஆக்டிவாக இருக்கமாட்டார். ஆனால் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அவருடைய மகள் மற்றும் கணவரின் புகைப்படங்களை மட்டுமே பதிவு செய்து வருவார்.

இந்த நிலையில் நான்கு வயதாகும் அசின் மகளின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அசின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அசின் மகளின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.