close
Choose your channels

கவர்ச்சி போஸ் கொடுத்த குடும்பப்பாங்கான நடிகை: நீங்களுமா இப்படி? என நெட்டிசன்கள் கேள்வி!

Sunday, September 20, 2020 • தமிழ் Comments

திரையில் கூட கவர்ச்சியாக நடிக்காத நடிகை இனியா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை தெரியும் அளவுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விமல் நடித்த ’வாகை சூட வா’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை இனியா. அதன் பின்னர் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மௌனகுரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சன் டிவியில் ’கண்ணான கண்ணே’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நெகட்டிவ் வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் போது கூட கிளாமராக நடிக்காமல் குடும்ப பாங்கான கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை இனியா, திடீரென தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கிளாமராக புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்

’உங்கள் ஆத்மாவை சாந்தப்படுத்துங்கள்’ என்று கேப்ஷன் உடன் வெளியாகியுள்ள இந்த புகைப்படத்தில் அவர் ஒரு அருவியின் அருகே தண்ணீரில் படுத்து இருப்பது போன்றும், உட்கார்ந்து இருப்பது போன்றும் போஸ்கள் உள்ளது. வெள்ளை உடையில் கவர்ச்சியின் உச்ச கட்டத்தில் இந்த புகைப்படங்கள் இருப்பதாக நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

பட வாய்ப்பு இல்லை என்பதற்காக இந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி விட்டீர்களே, நீங்களுமா? என நெட்டிசன்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்த கமெண்டுகளும் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz