close
Choose your channels

காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்துவிட்டதா? சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து!

Tuesday, April 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் ரசிகர்கள் காஜல் அகர்வாலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

நடிகை காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு மும்பை தொழில் அதிபர் கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமான நிலையில் அவருக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்று கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் குழந்தையும் நலம் என்றும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காஜல் அகர்வால், அவரது கணவர் கெளதம் மற்றும் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் தரப்பிலிருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.