close
Choose your channels

இன்ஸ்டாகிராமில் வேற லெவல் பண்ணும் அஜித்-விஜய் பட நடிகை!

Monday, December 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வரலாறு’, விஜய் நடித்த ’திருமலை’ விக்ரம் நடித்த ’ஜெமினி’ கமல்ஹாசன் நடித்த ’அன்பே சிவம்’, பிரசாந்த் நடித்த ‘வின்னர்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை கிரண் ரத்தோட்.

இவர் தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் நாற்பது வயதை தொடும் இந்த வயதிலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கிரண் தனது இன்ஸ்டாகிராமில் வேற லெவலில் சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். கண்ணாடி முன் நின்று கிட்டத்தட்ட உள்ளாடை மட்டுமே அணிந்து இவர் எடுத்துள்ள செல்பி கவர்ச்சி புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. ‘வின்னர் உள்பட ஒருசில திரைப்படங்களில் பிகினி உடையில் இவர் நடித்திருந்தாலும் நாற்பதை நெருங்கும் வயதிலும் கவர்ச்சியில் கலக்கி வருவது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தில் கிரண் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும், இந்த படம் ரிலீஸானால் அவர் திரையுலகில் மீண்டும் ஒரு சுற்று வலம் வருவார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.