close
Choose your channels

நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா?

Tuesday, July 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகை குஷ்பு டுவிட்டரில் ஆக்டிவ்வாக உள்ளவர் என்பதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள அவர் தனது திரைப்படங்கள் மற்றும் அரசியல் கருத்துக்களை டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் திடீரென குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மர்மநபர்களால் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த டுவிட்டுக்கள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் விரைவில் குஷ்புவின் தரப்பினர் அவரது டுவிட்டர் பக்கத்தை மீட்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் டுவிட்டர் பக்கங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது குஷ்புவின் டுவிட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.