close
Choose your channels

பிரபல நடிகர், தயாரிப்பாளருடன் பைக் ரைடிங் செய்த மஞ்சு வாரியர்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

Wednesday, April 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மஞ்சு வாரியர் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருடன் பைக் ரைடிங் செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாய் வருகின்றன.

அஜீத் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கேரக்டரில் நடித்த போது அவருடன் பைக் ரைடிங் செய்தார் என்பதும் அது மட்டும் இன்றி சமீபத்தில் அவர் பைக் ஓட்ட கற்றுக் கொண்டதோடு புதிய பைக் வாங்கும் புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார் என்பதும் தெரிந்ததே. அஜித்தின் நட்பினால் பைக் மீது அவருக்கு தீரா காதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கேரளாவில் உள்ள பல பகுதிகளில் அவர் பைக் ரைடிங் செய்வதை பார்க்க முடிகிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் நடிகை மஞ்சு வாரியர் பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் பினீஷ் சந்திரன் ஆகியோருடன் பைக் ரைடிங் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். மேலும் அவர்கள் இருவரும் எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்ததற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் ’நான் எதிர்கொள்ளாத அச்சங்கள் எனது வரம்புகள் ஆகின்றன, சௌபின் சாகிர் மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் நல்ல நண்பர்களாகவும் பொறுமையாக வழிகாட்டுபவர்களாகவும் இருந்ததற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் பதிவு செய்த இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

அஜீத் நடித்த ’துணிவு’ தனுஷ் நடித்த ’அசுரன்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்த மஞ்சு வாரியர் தற்போது மலையாள திரையுலகில் பிசியான நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.