close
Choose your channels

விக்ரம் பட நடிகைக்கு திருமணம்: திரையுலகினர் வாழ்த்து 

Sunday, September 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடித்துவரும் ’கோப்ரா’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை மியா ஜார்ஜ். ஏற்கனவே தமிழில் ’அமர காவியம்’ ’ஒரு நாள் கூத்து’ ’வெற்றிவேல்’ ’இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரள தொழில் அதிபர் அஸ்வின் என்பவருடன் மியா ஜார்ஜுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அடுத்து செப்டம்பர் 12ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என இரு வீட்டார் உறுதி செய்திருந்தனர்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி நேற்று மியா ஜார்ஜ்-அஸ்வின் திருமணம் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் பகுதியில் உள்ள சர்ச் ஒன்றில் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. மணமக்கள் இருவரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றிக் கொண்டனர். மியா ஜார்ஜ் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து ரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.